shadow

mumbaiஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து குழப்பநிலை தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனவே இன்னும் எந்த அணியும் அரையிறுதிக்கு உறுதியாகாத நிலை தொடர்கிறது.

நேற்று மும்பையில் நடந்த போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி:    1714/4    20 ஓவர்கள்

சிம்மன்ஸ்        14
பட்டேல்        21
ரோஹித் சர்மா    30
\ராயுடு        2
பொல்லர்டு    33
பாண்ட்யா    61

உதிரிகள்        10

கொல்கத்தா அணி: 166/7     20 ஓவர்கள்

உத்தப்பா        25
காம்பீர்        38
பாண்டே         1
யூசுப் பதான்    52
சாகிப் அல் ஹசன்    23
ரூசல்         2
யாதவ்        11
செளலா         1
யாதவ்         5

உதிரிகள்         8

ஆட்டநாயகன்: பாண்ட்யா (மும்பை அணி)

    

\

Leave a Reply