மும்பை கட்டிடம் மீது மோதிய விமானம்: 5 பேர் பலி

மும்பையில் உள்ள காட்கோபர் என்றா பகுதியில் இன்று நண்பகல் நேரத்தில் சிறியரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியதால் ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் யணம் செய்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மும்பை நகரின் முக்கிய பகுதியான காட்கோபர் பகுயில் இன்று மக்கள் வழக்கம்போல் பணிகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென பிற்பகல் 1.30 மணி அளவில் சிறிய ரக விமானம் ஒன்று அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மீது மோதி விழுந்து தீப்பிடித்தது.

விமானம் மோதிய வேகத்தில் உடைந்து சிதறி, தீப்பற்றியது. இது குறித்து போலீஸுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் அவினிஷ் அவஸ்தி கூறுகையில், மும்பையில் கட்டிடத்தின் மீது மோதி விழுந்த விமானம் மாநில அரசுக்கு சொந்தமானதல்ல. இதை மும்பையில் உள்ள யுஓய் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம் எனத் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *