shadow

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் மும்பை த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய முக்கிய போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 50 ரன்களும், யாதவ் 27 ரன்களும், இஷான் கிஷான் 20 ரன்களும் எடுத்தனர்

இந்த நிலையில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. எனவே இந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply