shadow

mullai periyaruகேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 142 அடி அளவை தாண்டி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகளவு இருப்பதால் இன்னும் சில நாட்களில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி 142அடி தண்ணீர் தேங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முல்லைப்பெரியாறு அணையின்  நீர்மட்டம் நேற்று வரை 140.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,916 கன அடியிலிருந்து 2,500 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு 456 கன அடி நீர் திறந்துவிடப்பட்டும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் விறுவிறுவென நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணை வரை வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 7ஆம் தேதி உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின்படி அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் வகையில், கடந்த ஜூலை 17ஆம் தேதி, பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் நாதன் தலைமையில் பார்வையிட்ட மூவர் கண்காணிப்புக் குழுவினர், அணையின் 13 கதவணைகளை இறக்கினர். இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கி வருகிறது.

Leave a Reply