shadow

mullai-periyar

முல்லை பெரியாறு அணை பலவீனமான உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு மேலும் உயர்த்தலாம் என்றும் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் அதிரடி உத்தரவு இட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்றும் அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்டிருந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் அணை பலமாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாமல், அணை பாதுகாப்பு சட்டத்தை கேரள அரசு அதிரடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. தற்போது அந்த சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதால் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் இன்று காலை இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதனால் தமிழக மக்கள் குறிப்பாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும், கேரள அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply