shadow

11

 இது வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகை கீரை.
  இலை துவர்ப்புச் சுவையுடையது.
  இதனை எண்ணெய்யில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்து துவையல் செய்து உணவில் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
  கீரையை சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
  துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்து கூட்டு செய்யலாம்.
  கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி உண்டால், மூட்டு வலி, கை – கால் வலி, முதுகு வலி, உடல்வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
  முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து, நெய்யில் வதக்கி உட் கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
  இக்கீரையின் சாற்றைக் காதில் விட்டால், காது வலி நிற்கும்.
  கட்டிகளில் வைத்துக் கட்டினால், அவை உடைந்து புண் ஆறும்.
  தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
  பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக் கரண்டி போதும்.

Leave a Reply