Chennai Today News

நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ யார்>

நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ யார்>

தமிழ் சினிமாவின் ஆணிவேர் எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையாகாது. எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் குருவாக இருந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக அவரது பேரனும் இயக்குனருமான ஐக் தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து ஐக் தனது டுவிட்டரில் கூறியதாவது: எம்.ஆர்.ராதா அவர்களை பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் எம்.ஆர்.ராதா கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!