Mr.லோக்கல் பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த புரமோஷனாக டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்திற்கு இவர் இசையமைப்பது இதுதான் முதல்முறை.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply