Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகிய ‘Mr.லோக்கல்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏற்கனவே மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள்ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *