shadow

dayanthiகடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்ற  உறுப்பினர்களாக பதவி வகித்த பல எம்.பிக்கள் தங்களது தொகுதி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகுதி பணத்தை 50 சதவீத அளவுக்குக் கூட செலவிடாமல் இருந்த அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பலர் தங்களது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவிகித அளவைக் கூட மக்களுக்காக செலவு செய்யவில்லை. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வாறு செலவு செய்யாத எம்பிக்கள் மீண்டும் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்களில் கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்கா, ஸ்ரீபிராட் நாயக் உள்ளிட்டோர்களும் அடங்குவர்

தில்லியில் வெற்றி பெற்று எம்.பியான சந்தீப் தீட்சித், ரமேஷ் குமார் ஆகியோர் தங்களது தொகுதியின் மேம்பாட்டுக்காக வெறும் 5 கோடிகளைத்தான் செலவிட்டுள்ளனர். திமுகவில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்ற தயாநிதி மாறன் தனது தொகுதி நிதியை வெறும் 20 சதவிகிதம்தான் செலவழித்துள்ளார்.

மக்களுக்காக அரசு கொடுத்த நிதியை மக்களுக்கு செலவழிக்காமல் தயாநிதி மாறன் உள்பட பல எம்.பிக்கள் துரோகம் செய்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மேற்குவங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் மட்டுமே தங்கள் தொகுதி நிதியை முழுமையாக செலவழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply