ரெயில்களில் திரைப்படம்: பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு!

அடுத்த ஆண்டு முதல் அதாவது வரும் 2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் திரைப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரெயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெயில் பயணிகளை கவர பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரெயில்களில் திரைப்படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த பொறுப்பை ஏற்றுள்ள ரயில் டெல் நிறுவனம் சேவையை வழங்க ஜீ என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்கோ நெட்வொர்க் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.

பிரிமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், மெயில்களில் மட்டுமன்றி புறநகர் ரயில்களிலும் 2022-ம் ஆண்டு முதல் சினிமா, பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளன. ரெயில்களில் மட்டுமின்றி வைபை வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.

Leave a Reply