shadow

மொட்ட சிவா கெட்ட சிவா வசூல் எப்படி?

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதிகளை மாற்றி ஒருவழியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னர் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனது ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் ‘காஞ்சனா 2’ போல இருக்கும் என்று எதிர்பார்த்து வியாபாரம் ஆனது. ஆனால் ஓப்பனிங் வசூல் சுமாராகத்தான் இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. குறிப்பாக தனக்கு தானே மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்ட ராகவா லாரன்ஸ் மீது நெகட்டிவ் இமேஜ் விழுந்ததும் வசூல் குறைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த வாரம் சுமார் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சுமாரான ரிசல்ட் காரணமாக இந்த படத்தின் வசூல் இன்று குறைந்துள்ளதாகவும், விநியோகிஸ்தர்கள் எதிர்பார்த்த லாபம் இல்லை என்றாலும் போட்ட முதல் தேறிவிடும் ஆவரேஜ் வசூல் படமாகவே இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply