shadow

இளம் வயதினர் அதிகமாக மரணம் அடைய விபத்துக்களே காரணம். ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வயதானவர்கள் மூப்பு, மற்றும் நோய் காரணமாக அதிகளவு உயிரிழந்தாலும் இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழக்க சாலை விபத்துக்களே காரணம் என ஐ.நா சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

உலகம் முழுவதும் உள்ள 10 வயது முதல் 19 வயது வரையிலான இளம்வயதினர் உயிரிழக்க காரணமாக உள்ளவை குறித்து, ஐ.நா ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐ.நா, இளம்வயதினர் உயிரிழப்பதற்கு காரணமான முதல் 5 இடங்களில் உள்ள ஆபத்தான நிகழ்வுகள் குறித்து தெரிவித்துள்ளது. அதில் முதல் இடத்தில் சாலை விபத்துக்கள் உள்ளது. இதையடுத்து நிமோனியா, தற்கொலை, வயிறு தொடர்பான பிரச்னைகள், நீரில் மூழ்கி உயிரிழப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 11 லட்சம் பேர் (நாள்தோறும் சுமார் 3,000 பேர்) சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

72,655 பேர் மூச்சு திணறல், 67,149 பேர் தற்கொலை, 63,575 பேர் வயிறு சம்பந்தமான நோய்கள், 57,125 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தும் சரி செய்யக்கூடிய குறைகளாக இருப்பினும், இளம்வயதினரின் உயிரிழப்பு இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இதனை சரிசெய்வதற்கான வழிகாட்டுதல்களை பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஐ.நா சபை அனுப்பியுள்ளது.

Leave a Reply