கொத்து கொத்தாக புதைக்கும் அவலம்

கொரோனா பலி எண்ணிக்கையில் ஒரே நாளில் 2,000ஐ கடந்த முதல் நாடானது அமெரிக்கா. கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் மொத்தம் 18,586 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனாவில் இருந்து 28,993 பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனாவுக்கு அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் பலியாகி வருவதால் சமாதி கட்ட கூட இடமும் நேரமும் இல்லாமல் கொத்து கொத்தாக பெரிய குழி தோண்டி மொத்தமாக புதைக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது

அமெரிக்கா, கொரோனா, 2000 பலி, வைரஸ்,

Leave a Reply