shadow

0a4abffe-7dce-46ea-9aa7-72d7c275b746_S_secvpf

பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ முடியும் என்ற உண்மையை, நாம் சித்தர்கள் மூலமாகவும், மலைவாழ் மக்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும். பழங்களில் இனிப்பு, வைட்டமின், நார்ச்சத்து, தாதுப்பொருட்கள் ஆகியவை ஏராளமாய் உள்ளன. பழங்களில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் நீங்கள் எவ்வளவு பழம் சாப்பிட்டாலும் உடலின் எடை கூடவே கூடாது.

ஏனென்றால் பழங்களில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாக உள்ளதே காரணம். கார்போஹைட்ரேட், சிறிதளவு புரோட்டின் ஆகியவை காணப்பட்டாலும், உடல் எடைஅதிகமாகி விடாது. சொல்லப்போனால் பேரிக்காயில் மட்டுமே கொழுப்பு அதிகம் காணப்படுகிறது. மற்ற பழங்களில் கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது. பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. அதை பழரசமாகவோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.

பழம் சாப்பிடும்போது திருப்தி ஏற்படும் வரையில் சாப்பிட வேண்டும் என்பது மிக அவசியம். ஒரு ஆப்பிளை சாப்பிட்டு, வயிறு நிறையவில்லை என்றால் இன்னொரு ஆப்பிள் சாப்பிடலாம். வயிறு நிரம்பினால் பழம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, அடுத்த 90 நிமிடங்கள் வேறு ஒன்றும் சாப்பிட வேண்டாம். பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட கடித்து சாப்பிடுவது நல்லது. நறுக்கி சாப்பிடும்போது வைட்டமின் ‘சி‘ மற்றும் ‘ஏ‘ சத்துக்கள் குறைந்து விடுகின்றன. நறுக்கிய பழத்தை பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதால் பழங்களின் சத்தைக் குறைத்து விடுகின்றன.

மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள், ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் தொடங்கும். உடலில் ரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். காலை 6 மணி முதல் 9 மணி வரை சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம். 9 மணி முதல் 12 மணி வரை ஆரஞ்சு, பப்பாளி , பேரிக்காய் போன்றவை சாப்பிடலாம்.

மாலை நேரங்களில் மாம்பழம், மாதுளம் பழம், செர்ரி, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம். பழங்கள், காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்தால், ரத்தக் கொதிப்பு முதல் பலவகையான நோய்களை தடுக்கலாம். அரிசி உணவையே சாப்பிட்டுப் பழகியதால் என்னவோ பழங்களை மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறைவு ஏற்படாது. பசிப்பது போலவே எண்ணம் தோன்றும். அது மாறுவதற்கு தொடர்ந்து பல வாரங்கள் பழங்களை மட்டும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட வேண்டும்.

Leave a Reply