அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, சந்திரனில் வீடுகளை கட்டுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சந்திரனை பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை(3D பிரிண்டிங்) பயன்படுத்தி, வீடுகள் கட்டுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.

இத்தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை, கணணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணிநேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இதற்காக அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பல்கலைகழகத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இயற்கை சீற்றங்களினால் பேரழிவுக்கு உள்ளான இடங்களில் மிக எளிதாக வீடுகளை கட்ட முடியும் என பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply