shadow

6a

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் தவறான உறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அவரது அந்தரங்க உதவியாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கி, தன்னை தானே மன்னித்து கொண்டதாக சமீபத்தில் அவர் எழுதிய பரபரபான கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபராக இருந்த பில் கிளிண்டன் அந்தரங்க செயலாளராக பணியாற்றியவர் மோனிகா. இவருக்கு பில்கிளிண்டனுக்கு தவறான உறவு இருந்ததாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பின்னர் நடந்த மரபணு சோதனையில் இருவரும் உறவு கொண்டது நிரூபணம் ஆனது. அதன் பின்னரே பில்கிளிண்டன் தன் தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து சமீபத்தில் அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய மோனிகா, என் கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறுகளை நினைத்து பார்க்கின்றேன். அமெரிக்க அதிபரின் எல்லையில்லா அதிகார மையத்திற்கு நான் பலிகடா ஆக்கப்பட்டேன். அதன் விளைவாக என் வாழ்க்கையில் நான் மிகுந்த துயரம் அடைந்தேன். என்னிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணை காரணமாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன். என்னுடைய தவறுக்கு என்னை நானே மன்னித்துக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு தற்போது வந்துவிட்டேன். இணைய உலகில் பெரும் அவமானம் பெற்ற என்னை நானே மன்னித்து கொள்கிறேஎன். இனிவரும் காலங்களில் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறேன்” என்று எழுதியுள்ளார்.

இந்த கட்டுரை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply