shadow

“ஆப்கன் போரின் மோனாலிசா’ என்று அழைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற பெண் கைது

afghan“நேஷனல் ஜியாகிராஃபிக்’ பத்திரிகைப் புகைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆப்கன் அகதி சர்பத் குலா என்ற பெண் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமை பெற்றதாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அகதி முகாமில் கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் “நேஷனல் ஜியாகிராஃபிக்’ மாத இதழின் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்குரி என்பவர் ஒரு 12 வயது சிறுமியை புகைப்படம் எடுத்தார். சர்பத் குலா என்ற அந்த சிறுமியின் புகைப்படம் அந்த மாத இதழின் முதல் பக்கத்தில் வெளீயாகி உலகப்புகழ் பெற்றது. “ஆப்கன் போரின் மோனாலிசா’ என்று அழைக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமி தற்போது 46 வயதான பெண்ணாக உள்ளார்.

இந்நிலையில் இந்த பெண் போலியான ஆவணங்களை கொடுத்து இவருக்கும் இவரது குடும்பத்தினர்களுக்கும் பாகிஸ்தான் குடியுரிமை அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக புலனாய்வுத் துறையினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக சர்பத்குலாவை நேற்று பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு போலி அடையாள அட்டைகளை வழங்கிய அதிகாரிகள் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply