Chennai Today News

2 மணி நேர படத்தில் ஒரு பணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள்

2 மணி நேர படத்தில் ஒரு பணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள்

த்ரிஷா நடிப்பில் மாதேஷ் இயக்கிய மோகினி திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் பாதி காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘இந்த படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் Visual Effects மிக அருமையாக வந்துள்ளது. காதலன்” படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது.

த்ரிஷாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் சுரஷே் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!