மோகன்லால், மீனா நடித்த த்ரிஷம் என்ற மலையாள திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகி கேரளா முழுவதும் நல்ல வசூலை தந்தது. இந்த படத்தின் மூலம் மீனா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார்.

இந்த படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் “அட்லஸ் கேரள பிலிம்  விருது”  என்ற விருது இந்த படத்தில் நடித்த மோகன்லாலுக்கு கிடைத்துள்ளது.  மேலும் நாடன் என்ற படத்தில் சிறப்பாக நடித்த ரம்யா நம்பீசனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

2013ஆம் ஆண்டின் சிறந்த படமாக த்ரிஷம் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் சிறந்த இயக்குனருக்காக விருதை பெற்றுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *