shadow

ஒரே படத்தில் அமிதாப்-மோகன்லால்

இரண்டு பெரிய ஸ்டார்கள் இணைந்து ஒரே படத்தில் நடித்து வருவது தற்போது இந்திய திரையுலகின் டிரண்டாக உள்ளது. சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் பவன்கல்யாண் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள் என்று கருதப்படும் அமிதாப்பச்சன் மற்றும் மோகன்லால் ஒரே படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பிரபல விளம்பர பட இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் அமிதாப், மோகன்லாலுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ‘ஒடியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மலையாள மொழியில் 3D ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

Leave a Reply