shadow

26TH_AJIT_KUMAR_DO_1913641eஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத்குமார் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்கும் முன்பே நவாஷ் ஷெரிப் சந்திப்பின்போது பேசவேண்டிய கருத்துக்களை மோடிக்கு தொகுத்து கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்க் தலைவர்களுடன் மோடி பேசவேண்டிய விஷயங்கள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துச் சொன்னவரும் இவர்தான்.  அஜீத்குமர் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதால் தீவிரவாதிகள் கலக்கம் அடைந்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்தான் இந்த அஜீத்குமார்.

பிரதமராக பதவியேற்றதும் மோடி நியமித்த முதல் அதிகாரி அஜித்குமார்தான். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜீத் குமாருக்கு வயது 69. இவர் 1968ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தது முதல், பல வருடங்கள் உளவுத்துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.  காந்தகார் விமானக்கடத்தலில் போது தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விமானப்பயணிகளை மீட்க உதவியாக இருந்தவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மாவோயிஸ்ட் உள்பட முக்கிய தீவிரவாத கூட்டங்களை ஒழிக்கும் முதல் அசைன்மெண்ட்டை இவரிடம் மோடி கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply