அதிரடிகள் தொடரும். ஜப்பானில் இருந்து திரும்பிய பிரதமர் பேட்டி

modiரூ.500, ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்துவிட்டு நாடே அல்லோகலமாக இருக்கும் நிலையில் திட்டமிட்டபடி ஜப்பான் கிளம்பிய பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமருடன் முக்கிய ஆலோசனையில் கலந்து கொண்டதோடு பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கருப்புப்பணத்தை ஒழிக்க இன்னும் அதிரடிகள் தொடரும்’ என்று கூறினார்.

மேலும் கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டு புழக்கத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாகவே ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தோம் என்றும் இந்த அறிவிப்புக்கு எதிர்பார்த்ததைவிட அதிக பலன்கள் கிடைத்துள்ளதாகவும், பலவித சிரமங்களுக்கு இடையே இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இனிவரும் நாட்களில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *