shadow

modi canadaபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ்
மற்றும் ஜெர்மனி பயணங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று  இரவு கனடாவின் ஒட்டாவோ நகருக்கு சென்றார். 42 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் கனடா செல்வதால்  அவருக்கு ஒட்டாவோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடியை கனடாவின் அரசு உயரதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். கனடாவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் மோடி மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு கனடாவில் வாழும் இந்திய தொழிலதிபர்களிடம் முதலீடு திரட்ட உள்ளார். மேலும் அவர் தலைநகர் டொரண்டோ, வான்கூவர் ஆகிய நகரங்களுக்கும் செல்லவுள்ளார். பின்னர் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் வர்த்தக முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதன்பின்னர் வரும் வெள்ளியன்று தனது வெளிநாட்டை சுற்றுப்பயணத்தை முடித்து அவர் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Leave a Reply