shadow

narendramodiபாரத பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் பேருரையாற்ற இருக்கின்றார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் உலக நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உரை நிகழ்த்து வழக்கம். இதன்படி  ஐ.நா. பொதுச் சபையின் 69வது கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் தலைவர்களின் பட்டியலை ஐ.நா.சபை இன்று முறைப்படி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் மோடி செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி உரையாற்றவுள்ளதாக  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் 200 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் முன் பிரதமர் மோடி முதல்முறையாக உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையை தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Leave a Reply