shadow

modi templeபாரத பிரதமர் தனக்கு கோவில் கட்டவேண்டாம் என நேற்று டுவிட்டர் மூலம் அறிவிப்பு செய்ததன் காரணமாக மோடியின் கோயில் திறப்பு விழா நிறுத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து தற்போது இரவோடு இரவாக அந்த கோயில் இடுத்து தரை மட்டமாக்கிவிட்டதாக புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. நேற்று மோடி தனது டுவிட்டரில் எனக்கு கோயில் கட்டப்படுவது கவலை அளிப்பதாக கூறினார். மோடியின் அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்த கோயிலை கட்டிய அமைப்பினரும், உள்ளூர் மக்களும் சேர்ந்து இரவோடு இரவாக அக்கோவிலை இடித்துத் தள்ளினர். முதலில் மோடியின் சிலையை மட்டுமே அகற்றியதாகவும், பிறகு கோயிலையே இடித்து விட்டதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் உந்தாத் தெரிவித்தார்.

பாரத மாதா கோயில் கட்டுவதற்காக, அந்த நிலத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம பஞ்சாயத்து தானமாக அளித்தது. ஆனால், ‘ஓம் யுவ குழு’, பாரத மாதா கோயிலுக்கு பதிலாக மோடி கோயிலை கட்டிவிட்டது.

பிரதமரின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கவே இரவோடு இரவாக கோயிலை ஓம் யுவ குழு இடித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply