shadow

12தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க அவருடைய போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றார். அவரை தனது குடும்பத்துடன் இன்முகத்துடன் வரவேற்றார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “‘மோடி பவர்ஃபுல் லீடர். நான் அவர் நலம் விரும்பி, அவர் எனது நலம் விரும்பி. இது நட்பு ரீதியான சந்திப்பு…அரசியல் இல்லை…” என்று கூறினர். ஆனாலும் ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவு அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து மோடியிடம் கேட்டபோது, “தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக கூறினார்.

பிரதமர் வேட்பாளர் ஒருவர் ரஜினியின் வீடுதேடி வந்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறுவது இதுவே முதல் தடவை.

12

Leave a Reply