தமிழகத்திற்கு அம்மா இனி மோடிதான்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக மக்களுக்கு இனிமேல் பிரதமர் மோடிதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நடந்த மாநாடு என்றில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மகள் தாமரை மாநாடு” என்கிற பெயரில் மதுரையில் நேற்று மாநாடு ஒன்று பாஜக சார்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி விஜயரகத்கர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம், மக்களிடையே நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றது. தமிழகம் தாமரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியும்’ என்று கூறினார்.

இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது: ஒரு பெண் நினைத்தால் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைக்க முடியும். பெண்கள் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள் பல. எனவே தமிழகத்திற்கு அம்மா இனி மோடிதான்’ என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *