பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், அந்த அமைப்பின் இணைய இதழான அல் குலாமில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால், அவரை குறிவைத்து தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொரு தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தவாவும், இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன் தலைவர் முஹம்மது ஹஃபிஸ் சயீத், அதே அல் குலாம் இதழில் இதனைத் தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பாட்னா பொதுக்கூட்டத்தில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது என்றும், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கத்தினரின் கொலை இலக்கு பட்டியலில் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *