shadow

governors indiaஆறு மாநில கவர்னர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுக்குள் முடிகிறது. அந்த ஆறு மாநிலங்களோடு சேர்த்து மற்ற சில மாநிலங்களின் கவர்னர்களையும் அதிரடியாக மாற்ற மோடி அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. புதிய ஆளுனர்களுகான பட்டியல் ஒன்றை தயாரிப்பதில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆட்சி மாறினால் அனைத்து மாநில கவர்னர்களையும் நீக்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மோடி அரசு ஒருசில கவர்னர்களை மட்டும் நீக்க முடிவு செய்துள்ளது.

புதிய கவர்னர்களாக யஷ்வந்த் சின்ஹா, வி.கே.மல்ஹோத்ரா, பி.சி.கந்தூரி, சாந்தகுமார், கல்யாண்சிங், லால்ஜி டாண்டன், கேசரிநாத் திரிபாதி மற்றும்  ஜஸ்வந்த் சிங் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நீக்கப்படும் கவர்னர்களின் பட்டியலில் கேரள ஆளுனர் ஷீலா தீட்சித் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பீஹார் கவர்னர் டி.ஒய்.பாட்டீல், ஜம்மு-காஷ்மீர் ஆளுனர் எம்.என்.வோரா மற்றும் அசாமின் ஜானகி வல்லப் பட்நாயக் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது.

தற்போதைக்கு தமிழக ஆளுனர் ரோசய்யா மாற்றப்பட மாட்டார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறிவருகின்றன.

Leave a Reply