shadow

gilani-natendra-modi

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண தன்னை ஏழு பேர் கொண்ட மோடியின் தூதுவர்கள் சந்தித்தார்கள் என காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அலி ஷா கிலானி கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலு இந்த தகவல் ஆதாரமற்றது என பாரதிய ஜனதா மறுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி மோடியின் தூதுவர்கள் என ஏழு பேர் கொண்ட குழு ஒன்றுதன்னை சந்தித்ததாகவும், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மோடி என்னை சந்திக்க விரும்புவதாகவும், அவர்கள் கூறினர். ஆனால் மோடி இன்னும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை தீவிரமாக கடைபிடிப்பவர் என்பதால் அவரிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்த நான் மறுத்துவிட்டேன் என இன்று கிலானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கிலானியின் இந்த பேட்டி விஷமத்தனமானது என்றும், அவரை சந்திக்கும்படி எந்த தூதுவர்களை பாரதிய ஜனதா சார்பொலோ அல்லது மோடியின் சார்பிலோ அனுப்பப்படவில்லை என்றும், கூறியுள்ள பாஜக, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் பா.ஜனதா தெளிவாக உள்ளது என்றும், அதில் மாற்று கருத்துக்கே இடமில்லை என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. .

Leave a Reply