shadow

தமிழிசை பதவிக்கு ஆபத்து? ஏமாற்றம் அடைந்த பிரதமர்
modi
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக வந்த மோடிக்கு இருந்த வரவேற்பில் பாதிகூட தற்போது இல்லை. ஓசூர், சென்னை மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மேலும் பிரதமர் பேசிக்கொண்டு இருந்தபோதே பலர் எழுந்து சென்றனர். இதனால் கடுப்பான பிரதமர் மோடி தமிழிசை உள்பட தமிழக நிர்வாகிகளை காய்ச்சி எடுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின்போது இருந்து கூட்டணியை தக்க வைக்க தெரியாமல் தமிழக பாஜகவினர் கோஷ்டி பூசலுடன் செயல்படுவதால்தான் இந்த நிலை என்பதை பிரதமர் நேரடியாக தமிழிசையிடம் கூறி வருத்தப்பட்டாராம். எனவே தேர்தலுக்கு பின்னர் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது நம்முடன் இருந்த கூட்டணிகளை உடையாமல் கொண்டு சென்றிருந்தால், இவ்வளவு இக்கட்டான நிலை வந்திருக்காது. கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பையும் வலுப்படுத்தவில்லை. இத்தனை கோஷ்டிகளாக பிரிந்து கிடந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது? உங்களுக்கெல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமே கிடையாதா?’ என்று கூறி தனது வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டு பாஜக தமிழக தலைமை சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என்பதே மோடி மற்றும் அமித்ஷாவின் குற்றச்சாட்டு என கூறப்படுகிறது.

Leave a Reply