shadow

ஒரே விழாவில் மோடி-ரஜினி. அரசியல் பேசுவார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் வரும் 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் நேரிலும், பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் முறையிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ‘துக்ளக் ஆண்டுவிழா அந்த பத்திரிகையின் ஆசிரியர் சோ தலைமையில் நடைபெறுவதுண்டு. கடந்த டிசம்பர் மாதம் சோ மறைந்ததை அடுத்து அவரது பொறுப்பை ஏற்றுள்ள குருமூர்த்தி இந்த விழாவினை நடத்துகிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் அவர்களும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் மோடியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ‘துக்ளக்’ விழாவில் நேரில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் மறைந்த சோ அவர்கள் குறித்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு வீடியோவும் ஒளிபரப்பப்படவுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply