உள்ளாடை விளம்பரத்தில் இரு கால்களும் இல்லாத அமெரிக்க அழகி

shadow

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இளம்பெண் உள்ளாடை நிறுவனம் ஒன்றின் விளம்பர மாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்ளாடை விளம்பரத்திற்கு ஒரு இளம்பெண் தேர்வு செய்யப்படுவதில் என்ன அதிசயம் என்று கேட்பவர்களுக்கான பதில், அந்த பெண் இரண்டு கால்களும் இல்லாதவர் என்பதுதான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கென்யா செஸ்ஸர் என்ற இளம்பெண், உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் தினமும் $1000 சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. 23வயதான இந்த பெண் பெரிய அழகியும் கிடையாது. கருப்பு நிறத்தில் சுமாரான அழகுடன் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருப்பவர் என்றும், அவரது அபாரமான தன்னம்பிக்கைக்காகவே அவருக்கு விளம்பர மாடலாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கவர்ச்சியாக விளம்பரத்தில் நடிக்க கால்கள் அவசியம் இல்லை என்பதே என்னுடைய கருத்து என கென்யா செஸ்ஸர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய பாய்பிரண்ட் பிரயன் வாட்டர்ஸ் என்பவரே தன்னுடைய தன்னம்பிக்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *