புனித மலையில் நிர்வாணமாக படமெடுத்த மாடல் அழகி. நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சி

நியூசிலாந்து நாட்டின் தரானாகி மலையை அங்குள்ள மாவேரி இன மக்களால் புனிதமாக கருதி வரும் நிலையில் அந்த மலையின் புனிதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு இளம்பெண் அந்த மலையில் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல மாடல் அழகியான ஜெய்லினி குக் என்பவர் சமீபத்தில் தரனாகி மலை மீது ஏறியதோடு, உச்சிக்கு சென்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு அனைவரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். குக்கின் இந்த செயல் மாவோரி மக்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மாவோரி இனமக்கள், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை மீது ஏறுவது விரும்புவதில்லை. இருப்பினும் அவர்கள் மலைமீது ஏறினாலும் அதை தடுப்பதில்லை.

ஆனால் புனிதமாக கருதும் எங்கள் தரானாகி மலையை மரியாதையாக வைத்துக் கொள்வதை விடுத்து, குக் போன்றோரின் செயல் எங்களை அவமதிப்பது போல உள்ளது என தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *