மொசாம்பியா  நாட்டு  பயணிகள் விமானம் நேற்று முன்தினம் தலைநகரில் இருந்து  அங்கோலா தலைநகர் லுயாண்டாவுக்கு புறப்பட்டு சென்றது.  அதில் 26 பயணிகள், 7 ஊழியர்கள் இருந்தனர்.

ஆனால் குறிப்பட்ட நேரத்தில் அந்த விமானம் அங்கோலா சென்று சேரவில்லை. எனவே அந்த விமானத்தை தேடும் பணி நடந்தது.இந்த நிலையில் நேற்று அந்த விமானம் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் எல்லையில்  விழுந்து நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விமானத்தின் உடைந்த சில பாகங்கள் மட்டுமே கிடைத்தது.  பெரும்பாலான பாகங்கள் சாம்பலாகி இருந்தன.

எனவே அந்த விமானத்தில் பயணம் செய்த 33 பேரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply