shadow

பெண்களுக்கு ஆபத்தா? செல்போன் பொத்தானை அழுத்தினால் போதும். மேனகா காந்தியின் புதிய முயற்சி
woman
பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும்  மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தற்போது புதியதாக பெண்களின் பாதுகாப்புக்காக செல்போன்களில் அவசர பொத்தான் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அவசர பொத்தான்கள் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் உதவும் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செல்போன்களில் அவசர பொத்தான் வசதியை ஏற்படுத்தித் தருவது குறித்து பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி 2016 மார்ச் மாதத்துக்கு பிறகு சந்தையில் அறிமுகமாகும் புதிய செல்போன்களில் இந்த வசதியை ஏற்படுத்தித் தர முன்னணி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. மேலும் பழைய செல்போன்களிலும் இந்த வசதியை செய்துக் கொடுக்க அந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பிட்ட செல்போன் சேவை மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

எதிர்பாராதவிதமாக பெண்கள் ஏதாவது ஓர் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்கள் அந்த அவசர பொத்தானை அழுத்தினால் போதும். அந்த தகவல் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் தேசிய அளவில் பெண்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண்ணும் விரைவில் அறிவிக்கப்படும். இந்த எண்ணில் போலீஸ், சட்டம், மருத்துவம், மனநலம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இவை தவிர கிராமங்களைச் சேர்ந்த படித்த பெண்களை தேர்வு செய்து அப்பகுதி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் உள்ளூர் போலீஸா ருக்கும் கிராம மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல் படுவார்கள். இவ்வாறு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

Chennai Today News: Mobile Firms Agree to Mandatory Panic Button for Women: Maneka Gandhi

Leave a Reply