shadow

himmat 2 டெல்லியில் அடிக்கடி பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் விதவிதமான தொல்லைகள் வருவதை ஒட்டி பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய ஆப்ஸ் ஒன்றை மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்துள்ளார்.

ஹிம்மத் (‘ஹிம்மத்’ என்றால் தைரியம், துணிச்சல் என்று அர்த்தம்) என்ற பெயருடைய இந்த ஆப்ஸை ஆண்ட்ராய்டு மொபைல்களில் டவுன்லோடு செய்து அதில் உங்களுடைய அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் உடனடியாக உங்கள் செல்போனை லேசாக ஷேக் செய்யலாம் அல்லது பவர்/சாஃப்ட் பட்டனை விடாமல் மூன்று விநாடிகள் அழுத்தலாம். அவ்வள்வுதான் நீங்கள் ஆபத்தில் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இருக்குமிடம் நோக்கி அருகிலுள்ள போலீஸார் உங்களுக்கு உதவுவதற்காக அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் வந்துவிடுவார்கள்.

hmmit_1

ஆனால் இந்த ஆப்ஸை தவறாக பயன்படுத்தினால் மூன்று முறை மட்டும் உங்களுக்கு வார்னிங் கொடுக்கப்படும். அதன்பின்னர் நீங்கள் இந்த ஆப்ஸை ஜென்மத்திற்கும் பயன்படுத்த முடியாது. இந்த ஆப்ஸை www.delhipolice.nic.in  என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

டெல்லியை அடுத்து இந்த ஆப்ஸ் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் அறிமுகம் செய்து வைக்கப்படும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply