shadow

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்

இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உள்பட முக்கிய செயலாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது

அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால் இந்த மழையினால் ஏற்படும் சேதம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆலோசனையில் செய்யப்படும் என்று கூறப்படுகிறது