shadow

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடியில் நினைவு மண்டபம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது,. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல் ஓபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நினைவிடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த நினைவு மண்டபம் குறித்து கருத்து கூறிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட் குற்றவாளி என தீர்ப்பளித்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது, ஜனநாயகத்துக்கு எதிரானது. ஊழலில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் ஊழல் புரிந்தவருக்கு நினைவு மண்டபம் கட்டுகின்றனர்” என கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கருத்தை தெரிவிப்பதாகவும், இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல்வாதிகளே இல்லை என்றும் அதிலும் திமுகவுக்கு ஊழல் குறித்து பேச அருகதையே இல்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் மக்களுக்காக பலநல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதை மறுக்க முடியாது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply