ஸ்டாலின் – திவாகரன் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை அடுத்து சமீபத்தில் அண்ணா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியை திவாகரன் ஆரம்பித்தார். இந்த நிலையில் தஞ்சையில் நடந்த திருமணம் ஒன்றில் திவாகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் திடீரென சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத் திருமணவிழா தஞ்சையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய அவர், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இதே வேளையில் தினகரன் அணியிலிருந்து வெளியேறிய திவாகரன் மேடைக்கு கீழே அமர்ந்து இருந்து ஸ்டாலின் பேசியதை கவனித்தார்.

பின்னர், மேடையில் இருந்து இறங்கிய ஸ்டாலின் நேராக திவாகரன் இருந்த இடத்துக்கு வந்தார். ஸ்டாலின் தன்னை நோக்கி வந்ததைக் கண்ட திவாகரன், எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ஸ்டாலினும் திவாகரனும் சந்தித்து கைகுலுக்கிய இந்த சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *