shadow

shadow

விழுப்புரம் அருகில் உள்ள கூவாகத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் மிஸ்.கூவாகம் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். உலகப்பிரசித்தி பெற்றா கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை அடுத்து இந்த பட்டத்திற்கான போட்டி நடைபெறும். இந்த போட்டியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் உள்ள திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் விழுப்புரத்தில் குவிந்தனர்.

நேற்று நடைபெற்ற மிஸ்.கூவாகம் பேஷன் போட்டியில் சுமார் 100 திருநங்கைகள் கலந்துகொண்டனர். வண்ண வண்ண ஆடைகள் அணிந்து அசத்திய திருநங்கைகளுக்கு அறிவுப்போட்டியும் வைக்கப்பட்டது. பின்னர் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய  விஜயவாடாவை சேர்ந்த சகானா முதல் பரிசை தட்டிச்சென்றார். இரண்டாவது இடத்தை ஈரோடு ஐஸ்வர்யாவும், மூன்றாவது இடத்தை நமீதாவும் பெற்றனர்.

வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் பரிசளித்து, மிஸ் கூவாகம் கிரீடத்தையும் அணிவித்தனர். மேலும் வெற்றி பெற்ற சகானா, ஐஸ்வர்யா, மற்றும் நமீதாவுக்கு இருவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “2014 திருநங்கைகளுக்கு முக்கியமான வருடம். திருநங்கைகளை முன்றாம் பாலினமாக அங்கிகரித்து, திருநங்கைகளுக்கு உச்ச நீதிமனறம் மிகப்பெரிய அங்கிகாரத்தை அளித்துள்ளது. இன்று சமுதாயத்தில் நீங்களும், நாங்களும் சமமே என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்று பேசினார்.

koovagam1

Leave a Reply