மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண்
தமிழகத்தை சேர்ந்த அனுகிரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துளார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
2018ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா பட்டத்துக்கான போட்டியில் 19 வயதான தமிழகத்தை சேர்த அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார். பிரெஞ்சு மொழியில் பி.ஏ. படித்து வரும் இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதை அடுத்து இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் வேல்டு பட்டத்திற்கான போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த விளங்கும் அனு, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். பைக் ஓட்டுவதிலும் விருப்பம் அதிகம் என்று கூறும் அனு, மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வெல்வதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.  
வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *