shadow

ஜீவாவுக்கு ஜோடியாகும் மிஸ் இமாச்சல பிரதேஷ்

ஜீவா நடித்த ‘கலகலப்பு 2’ சூப்பர் ஹிட் பெற்றதை அடுத்து தற்போது அவர் ‘கொரில்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஜீவா மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் இயக்கும் இந்த படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகி தேடும் படலம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிப்பது உறுதியாகியுள்ளது.

நடாஷா சிங் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் தனி இடத்தைப் பெற்ற இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படம் ஜிப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

”பழமைவாதக் குடும்பத்திலிருந்து வரும் கூச்ச சுபாவமுடைய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நாயகனை சந்தித்து காதலில் விழுந்த பிறகு என் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை இயக்குநர் ராஜுமுருகன் நேர்த்தியாகப் படத்தின் திரைக்கதையில் கூறியுள்ளார். ‘ஜிப்ஸி’ படத்தில் நடிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார் நடாஷா சிங்.

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் ‘ஜிப்ஸி’ படத்தைத் தயாரிக்கிறார்.இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply