மிருதன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் ‘யமபகாஷம்’
Untitled-5
‘நாய்கள்’ ஜாக்கிரதை இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கிய அடுத்த படமான ‘மிருதன்’ திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் அனைத்தும் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருதன் படத்திற்கு தெலுங்கில் ‘யமபகாஷம்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தெலுங்கு  ரிலீஸ் உரிமைக்காக e4echennai என்ற பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, லட்சுமிமேனன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி டிராபிக் போலீஸாகவும், லட்சுமி மேனன் டாக்டர் வேடத்திலும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் முதல் ஜோம்பி திரைப்படம் இதுதான் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *