shadow

விமானம் தாமதமானால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பயணிகள். ஒரு சுவாரசிய தகவல்

golfஉலகில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஏதாவது ஒரு காரணத்தால் விமானங்கள் திடீரென தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்படுவதுண்டு. இந்த தாமதம் நிமிடங்கள், மணிக்கணிக்கில் சில நேரங்களில் நாட்கணக்கிலும் இருப்பதுண்டு.

இம்மாதிரி விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டால் விமான பயணிகளுக்கு தங்கும் அறையும், உணவும் விமான நிலையத்தின் சார்பில் கொடுக்கும் வழக்கம் உண்டு.

இந்நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக மினியாபோலிஸ் என்ற விமான நிலையத்தில்  கோல்ப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாகும் நிலையில் தனிமையைப் போக்கி மன அமைதி பெறவும், மகிழ்ச்சியடையவும் இந்த விளையாட்டு மைதானம் உதவுவதாக பல பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விமான தாமதத்தை இங்கு வரும் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றனர் என கூறப்படுகிறது.

இதுபோல் உலகில் உள்ள மற்ற விமான நிலையங்களிலும் விமானம் தாமதம் ஆகும் நேரங்களில் இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply