அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும் என்றும், கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள் என்றும், சென்னையில் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் பொது மக்கள் கொரோனா மையங்களுக்கு வரத் தயங்கும் பகுதிகளில் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது என கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். மேலும் நெருக்கமான பகுதிகளில் மக்கள் வசிப்பதால், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply