எடப்பாடி பதவிப்பறிப்பை அடுத்து அமைச்சர் தங்கமணியின் பதவியும் பறிப்பு

20க்கும் குறைவான எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்து கொண்டு தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வரும் டிடிவி தினகரன் தரப்பினர் கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஒருசிலரின் கட்சி பதவியை நீக்கி காமெடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் தங்கமணியை நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.அன்பழகன் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி, முதல்வர் பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் என்பதும், கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்த ஆலோசனையில் முக்கிய இடம்பிடித்துள்ளவர் என்று தெரிந்தே இந்த நடவடிக்கையை தினகரன் எடுத்துள்ளார். ஆனால் தினகரனின் அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *