shadow

smiriti iraniகோவாவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறையை நோக்கி ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை  மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி கண்டுபிடித்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது.

மத்திய அமைச்சர்  ஸ்மிரிதி இரானி தனது கணவருடன் தற்போது கோவா சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் நேற்று கோவாவில் உள்ள பிரபலமான ரெடிமேட் ஆடை ஷோரூம் ஒன்றுக்கு சென்று உடை வாங்கினார். வாங்கிய உடை சரியாக இருக்கின்றதா? என்பதை அறிந்து கொள்ள அவர் டிரையல் அறைக்கு செல்லவிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் அந்த அறைக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது, அந்த அறையின் உள்பகுதியை நோக்கி ரகசிய கேமரா ஒன்று இருந்ததை கண்டுபிடித்து அமைச்சரிடம் கூறினார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் இரானி உடனடியாக இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூற, அவரும் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் உள்ளூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. மைக்கேல் லொபோவுக்கு போனில் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தனர். மைக்கேலுடன் போலீஸாரும் வந்தனர். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த கேமராவையும், ஹார்டு டிஸ்க்கையும் கைப்பற்றினர். அந்த கடை ஊழியர்களையும் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில், அந்த கேமராவில்   பலரது உடைமாற்றும் காட்சிகள், அந்த கடையில் உள்ள கம்ப்யூட்டர் ஒன்றில் பதிவாகி இருப்பதாக  எம்.எல்.ஏ. மைக்கேல் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply