shadow

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம். ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

senthil balajiதமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்த செந்தில் பாலாஜி இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி வகித்த வந்த போக்குவரத்து துறையை தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோது போக்குவரத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. கடந்த நான்கு ஆண்டுகளாக பல துறை அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டபோதும் செந்தில் பாலாஜியின் பதவிக்கு ஆபத்து வரவே இல்லை. யாரும் அசைக்க முடியாத நிலையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்து வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜி பெரிய யாகமே நடத்தி அனைவரின் கவனத்திற்கு ஆளானார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்த நிலையில் செந்தில் பாலாஜிதான் இருப்பதாக அதிமுகவினரே பேசி வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா இன்று அதிரடியாக நீக்கியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசையா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி வகித்து வந்த போக்குவரத்துத்துறை, தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வகித்து வந்த கட்சி பதவியான கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியையும் செந்தில் பாலாஜியிடம் இருந்து அதிரடியாக பறித்து அந்த பதவியையும்
அமைச்சர் தங்கமணி கூடுதலாக கவனிப்பார் என்றும் ஜெயலலிதா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Leave a Reply